இந்தியா

அடுத்த 5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை- கேரளாவில் மழைக்கு இதுவரை 6 பேர் பலி

Published On 2022-07-08 05:30 GMT   |   Update On 2022-07-08 07:19 GMT
  • மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
  • மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டு உள்ளனர்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. மேலும் மலையோர மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளதாக கூறியுள்ளது.

மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கேரளா முழுவதும் பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் வீடுகள் இடிந்தும், மண் சரிவில் சிக்கியும், வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டும் 6 பேர் பலியாகி உள்ளனர்.

மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டு உள்ளனர். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தி உள்ளனர்.

இதற்கிடையே மலையோர மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் வசிப்போர் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News