இந்தியா

பிரதமர் மோடியுடன் முதல் மந்திரி நிதிஷ்குமார் சந்திப்பு

Published On 2024-02-07 12:06 GMT   |   Update On 2024-02-07 12:06 GMT
  • பா.ஜ.க. ஆதரவுடன் பீகாரின் முதல் மந்திரியாக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றார்.
  • 9-வது முறையாக முதல் மந்திரியாக பதவியேற்ற அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

புதுடெல்லி:

பீகார் மாநிலத்தில் ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் திடீரென விலகினார். அதன்பின், ஆளுநரைச் சந்தித்த நிதிஷ்குமார் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, பா.ஜ.க. ஆதரவுடன் பீகாரின் முதல் மந்திரியாக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

இதற்கிடையே, 9-வது முறையாக முதல் மந்திரியாக பதவியேற்ற நிதிஷ்குமாருக்கு பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் இன்று சந்தித்தார். மரியாதை நிமித்தமான சந்திப்பு எனக்கூறிய பிரதமர் அலுவலகம் மாநிலத்துக்கு தேவையான நிதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர் என தெரிவித்தது.

Tags:    

Similar News