இந்தியா

5-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 11 மணி நிலவரப்படி 23.66 சதவீத வாக்குகள் பதிவு

Published On 2024-05-20 12:11 IST   |   Update On 2024-05-20 12:11:00 IST
  • 49 தொகுதிகளிலும் இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
  • பைசாபாத் பாராளுமன்றத் தொகுதி, அயோத்தி நகரை உள்ளடக்கியதாகும்.

பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து வருகிறது. வாக்குப்பதிவையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

அமேதி, ரேபரேலி, பைசாபாத் உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்றத் தொகுதிகளில் இத்தோ்தல் நடைபெறுகிறது. இதில் பைசாபாத் பாராளுமன்றத் தொகுதி, அயோத்தி நகரை உள்ளடக்கியதாகும்.

5-ம் கட்டமாக இன்று நடந்து வரும் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகாா், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதி அடங்கி உள்ளன. இந்த தொகுதிகளில் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை 11 மணி நிலவரப்படி 5-ம் கட்ட தேர்தலில் 23.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

பீகார் - 21.11 சதவீதம்

உத்தரபிரதேசம்- 27.76 சதவீதம்

ஜம்மு & காஷ்மீர் - 26.18 சதவீதம்

ஜார்க்கண்ட் - 26.18 சதவீதம்

லடாக்- 27.87 சதவீதம்

மகாராஷ்டிரா - 15.93 சதவீதம்

ஒடிசா- 21.07 சதவீதம்

மேற்கு வங்காளம்- 32.70 சதவீதம்


Tags:    

Similar News