இந்தியா
மாயாவதி

அனைத்து மாநிலங்களும் 'வாட்' வரியை குறைக்க வேண்டும்: மாயாவதி கோரிக்கை

Update: 2022-05-23 02:17 GMT
விலை மேலும் குறைய, மத்திய அரசின் அறிவுரையை பின்பற்றி, உத்தரபிரதேசம் உள்பட அனைத்து மாநிலங்களும் பெட்ரோல், டீசல் மீதான 'வாட்' வரியை குறைக்க வேண்டும் என்று மாயாவதி கூறியுள்ளார்.
லக்னோ:

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:- நீண்ட காலத்துக்கு பிறகு, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. பணவீக்கம், வறுமை, வேலையின்மை போன்றவற்றால் துயர வாழ்க்கைக்கு தள்ளப்பட்ட மக்களுக்கு சற்று நிவாரணம் அளித்துள்ளது.

விலை மேலும் குறைய, மத்திய அரசின் அறிவுரையை பின்பற்றி, உத்தரபிரதேசம் உள்பட அனைத்து மாநிலங்களும் பெட்ரோல், டீசல் மீதான 'வாட்' வரியை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News