search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாட் வரி"

    அரசுக்கு வரும் வருவாயின் பெரும்பகுதி பெட்ரோல் மீதான வரி மூலம் கிடைக்கும் நிலையில், அதனை எப்படி குறைக்க முடியும்? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். #PetrolDieselPriceHike
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.37 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.59 ஆக உள்ளது. வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், எரிபொருள் மீதான கலால் வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு தவிர்த்து மாநில அரசு வாட் வரி (மதிப்புக் கூட்டு வரி) விதிக்கிறது. இந்த வரியை குறைக்க வேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு தொடர்ந்து கேட்டுகொண்டு வருகிறது.


    இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “மாநில அரசுக்கு வரும் வருவாயின் பெரும்பகுதி எரிபொருள் மீதான வாட் வரியிலிருந்தும், டாஸ்மாக் மூலமே கிடைக்கிறது.

    பல்வேறு துறைகளின் கீழ் ரூ.77 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அரசின் செலவில் 70 சதவிகிதம் ஊழியர்களின் சம்பளமாக போகிறது. எனவே, வாட் வரியை குறைக்கும் நோக்கம் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
    ×