இந்தியா

ஓட்டு போடுபவர்களுக்கு இலவசமாக முடி வெட்டுப்படும்- சலூன் கடைக்காரர் வினோத அறிவிப்பு

Published On 2024-05-10 04:04 GMT   |   Update On 2024-05-10 04:04 GMT
  • வாக்குப்பதிவு அன்று வாக்களித்துவிட்டு வரும் நபர்களுக்கு தனது கடையில் இலவசமாக முடி வெட்டுவேன்.
  • சலூன் கடைக்காரரின் இந்த வினோத அறிவிப்பு ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் ஒருவர் ஓட்டு போடுபவர்களுக்கு இலவசமாக முடி வெட்டப்படும் என அறிவித்துள்ளார்.

விசாகப்பட்டினம் நகரில் உள்ள ஆர்.கே. சலூன் உரிமையாளர் ராதாகிருஷ்ணன். வாக்குப்பதிவு அன்று வாக்களித்துவிட்டு வரும் நபர்களுக்கு தனது கடையில் இலவசமாக முடி வெட்டுவேன்.

பொதுமக்கள் ஓட்டு போட்டதும் எனது கடைக்கு வந்து இலவசமாக முடி வெட்டிக் கொள்ளலாம். மேலும் விசாகப்பட்டினத்தில் முத்தியாலம்மா கோவில் அருகிலுயும் எனக்கு மற்றொரு கடை உள்ளது. அங்கு சென்று பொது மக்கள் இலவசமாக முடி வெட்டிக் கொள்ளலாம்.

இந்த சலுகையை பெற வாக்கு அளித்ததற்கான ஆதாரத்தை காண்பிக்க வேண்டும். பொதுமக்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சலூன் கடைக்காரரின் இந்த வினோத அறிவிப்பு ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News