இந்தியா
விபத்து

உ.பி.யில் விபத்து- திருமண கோஷ்டியினர் 6 பேர் பலி

Update: 2022-05-21 04:21 GMT
உத்தரபிரதேச மாநிலம் பலராம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது லாரி மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி உள்பட 6 பேர் பலியாகினர்.
உத்தரபிரதேச மாநிலம் லட்சுமண்பூரில் இருந்து பலராம் பூருக்கு கார் சென்று கொண்டிருந்தது. இதில் திருமண கோஷ்டியினர் பயணம் செய்தனர். பலராம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரி மீது கார் பயங்கரமாக மோதியது

இதில் சம்பவ இடத்திலேயே காரில் இருந்த கணவன்-மனைவி உள்பட 4 பேர் பலியானார்கள். ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லும் வழியில் 2 பேர் இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News