இந்தியா
ஸ்மிருதி இரானி (கோப்பு படம்)

ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ.250.60 கோடி ஒதுக்கீடு- மத்திய மந்திரி தகவல்

Published On 2022-03-23 18:14 GMT   |   Update On 2022-03-23 18:14 GMT
வளர் இளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கும் வகையில் இத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
புதுடெல்லி:

பாராளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது:

நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க, ஊட்டசத்து திட்டம் கடந்த 2018ம் ஆண்டு, மார்ச் 8ம் தேதி தொடங்கப்பட்டது. 6 வயது வரை உள்ள குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பினி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்யும் வகையில் இத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் 2022 ஜனவரி 1ம் தேதி வரை மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்துக்கு ரூ. 250 கோடியே  60 லட்சத்து 44 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.218 கோடியே 79 லட்சத்து 36 ஆயிரத்தை தமிழகம் பயன்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News