இந்தியா
உக்ரைனில் உள்ள இந்தியர்கள்

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க 100 பேருந்துகளை வழங்கியது ரஷியா

Published On 2022-03-05 16:30 GMT   |   Update On 2022-03-05 16:30 GMT
ஆபரேஷன் கங்கா திட்டத்தின்கீழ் இதுவரை 63 விமானங்களில் சுமார் 13,300 இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.
புதுடெல்லி:

உக்ரைன்- ரஷியா இடையிலான போர் 10வது நாளாக நீடிக்கும் நிலையில், போர் நடைபெறும் பகுதியில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. ஆபரேஷன் கங்கா திட்டத்தின்கீழ் இதுவரை 63 விமானங்களில் சுமார் 13,300 இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர். அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் 13 விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் பலர் வெளியேற முடியாமல் உள்ளனர். 

இந்நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களில் உள்ள இந்தியர்களை மீட்க 100 பேருந்துகளை ரஷியா வழங்கியுள்ளது. இதற்காக, மீட்பு பணியில் உறுதுணையாக இருக்கும் ரஷிய தரப்புடன் ஒருங்கிணைந்து செயல்பட, இந்திய தூதரக அதிகாரிகள் குழு பெல்கோரோடுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்தியாவில் உள்ள ரஷிய தூதரக அதிகாரி டெனிஸ் எலிபோவ் தெரிவித்துள்ளார். இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ரஷிய தூதரகம் கூறி உள்ளது.
Tags:    

Similar News