search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ukraine russia war"

    • ரஷியா 11 ஏவுகணைகளை மூலம் தாக்குதல் நடத்தியது.
    • ஏழு ஏவுகணைகளை வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டது.

    ரஷியா உக்ரைனின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 11-ந்தேதி டிரிபில்லியா மின்சார உற்பத்தி நிலையத்தை ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் உற்பத்தி நிலையம் முழுமையாக சேதம் அடைந்து 100 சதவீதம் மின்சாரம் தயாரிக்கும் திறனை இழந்ததாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கூறுகையில் "ரஷியா 11 ஏவுகணைகளை மின்சார உற்பத்தி நிலையம் நோக்கி வீசியது. அதில் உக்ரைன் ராணுவம் ஏழு ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது. 4 ஏவுகணைகள் டிரிபில்லியா மின்சார நிலையத்தை தாக்கிவிட்டது. ஏனென்றால் எங்களிடம் ஏவுகணைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் இல்லை. மின்சார நிலையத்தை பாதுகாப்பதற்கான ஏவுகணை அனைத்தும் தீர்ந்துவிட்டன" என்றார்.

    இந்த மின்சார உற்பத்தி நிலையம் கீவ் நகரின் தெற்குப்பகுதியில் 30 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. கீவ், ஜிடோமிர், செர்காசி ஆகிய நகரங்களுக்கு மின்சாரம் வழங்கி வருகிறது.

    ரஷியாவின் தாக்குதலில் சிறந்த முறையில் எதிர்கொள்ளும் இடமாக உக்ரைன் தலைநகர் விளங்குகிறது. ஆனால், உக்ரைனுக்கு நிதியுதவி வழங்கும் விவகாரம் அமெரிக்காவின் பாராளுமன்றத்தில் தொடர்ந்து நிலுவையில் உள்ளதால் வான்பாதுகாப்பில் சற்று குறைபாடு ஏற்பட்டுள்ளது.

    • சுமார் 3 மில்லியன் நுகர்வோருக்கு மின்சாரம் வழங்கி வந்தது.
    • பெரிய அளிவலான தாக்குதல் எங்களுடைய எரிசக்தி துறையை மோசமாக பாதித்துள்ளதாக உக்ரைன் எரிசக்தி துறை மந்திரி தெரிவி்துள்ளார்.

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை. சில நாடுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்வந்தன. இருந்த போதிலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. தற்போது சுவிட்சர்லாந்து அமைதி பேச்சுவார்த்தை முயற்சியை கையில் எடுத்துள்ளது.

    தற்போது இரு நாடுகளும் மாறிமாறி கட்டமைப்புகளை குறிவைத்து டிரோன் தாக்குதல், ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்த வகையில் உக்ரைனின் தலைநகர் கீவ், செர்காசி, ஜைடோமிர் மாகாணங்களுக்கு மின்சாரம் வழங்கி வந்த டிரைபில்ஸ்கா என்ற மிகப்பெரிய மின்சார உற்பத்தி நிலையத்தை ரஷியா தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.

    மின்சார உற்பத்தி நிலையம் எரிந்து ஒரு குறிப்பிட்ட தூரம் வரை புகை மூட்டமாக காட்சி அளித்ததாகவும், அது பயங்கரமானது எனவும் ஆலையை நிர்வகிக்கும் வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

    ரஷியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு பதிலடியாக உக்ரைன் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மாஸ்கோ தெரிவித்துள்ளது.

    டிரைபில்ஸ்கா உற்பத்தி நிலையம் சுமார் 3 மில்லியன் நுகர்வோருக்கு மின்சாரம் வழங்கி வந்தது. இந்த வருடத்தில் இருந்து இதன் தேவை சற்று குறைவாக என்பதால் மிகப்பெரிய பாதிப்பு இருக்காது எனத் தெரிவிக்கப்படுகிறது.

    ஆனால் வரவிருக்கும் கோடைக்காலத்தின்போது ஏசி பயன்படுத்தப்படும் என்பதால் அதிக மின்சார தேவை ஏற்படும். அப்போது பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    கார்கிவில் உள்ள எரிபொருள் கட்டமைப்பு மீது 10-க்கும் மேற்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த மாகாணத்தில் 2 லட்சம் மக்களுக்கு மேல் வசித்து வருவதாகவும், தொடர்ந்து அவர்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்படுவதாகவும் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

    பெரிய அளிவலான தாக்குதல் எங்களுடைய எரிசக்தி துறையை மோசமாக பாதித்துள்ளதாக உக்ரைன் எரிசக்தி துறை மந்திரி தெரிவி்துள்ளார்.

    2022-ம் ஆண்டு போர் தொடுத்ததில் இருந்து ரஷியா இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த மாதம் உக்ரைனின் எரிசக்தி தொடர்பான கட்டமைப்புகள் மீது அதிக அளவில் தாக்குதல் நடத்தியது. இதனால் நாட்டின் பாதி அளவிலான பகுதிகள் இருளில் மூழ்கியது.

    இந்த தாக்குதல் பாதுகாப்பதற்காகவும், எனர்ஜி சொத்துகளை பாதுகாப்பதற்கும் உக்ரைன் நாட்டிற்கான எச்சரிக்கை எனக் கருதப்படுகிறது. மேலும், உடனடியாக அவற்றை சரி செய்வதற்கான பரிசோனை எனவும் கூறப்படுகிறது.

    இதுபோன்ற வான் தாக்குதலை சமாளிக்க அதிகப்படியான வான் பாதுகாப்பு சிஸ்டம் தேவை என அதிகாரிகள் கேட்டு வரும் நிலையில், மெதுவாகத்தான் உக்ரைனுக்கு சப்ளை செய்யப்படுவதாக கூறப்படுவதாக தெரிகிறது.

    • ரஷியா, உக்ரைன் நாடுகள் இடையிலான போர் மூன்றாவது ஆண்டாக நடந்து வருகிறது.
    • பேரழிவை சந்தித்தாலும் உக்ரைன் பதில் தாக்குதலால் ரஷியாவுக்கு அழிவை கொடுத்து வருகிறது.

    மாஸ்கோ:

    ரஷியா, உக்ரைன் நாடுகளுக்கு இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் பேரழிவை சந்தித்த போதிலும் பதில் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டு ரஷியாவுக்கு அழிவுகளைக் கொடுத்து வருகிறது.

    இதற்கிடையே, உக்ரைன் ராணுவம் கடந்த சில மாதங்களாக ரஷியாவின் போர்க்கப்பல்களை டிரோன்கள் மூலம் தாக்கி வருகிறது.

    போர் தொடங்கியதில் இருந்து 3 போர்க்கப்பலை உக்ரைன் மூழ்கடித்திருந்தது.

    இந்நிலையில், உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 2 பேர் பலியாகினர் என்றும், பெல்கோரோடில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பெல்கோரோட் கவர்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் ராணுவம் ரஷியாவின் பெல்கோரோடில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் தொடர்ந்து நடப்பதால் வணிக வளாகங்கள் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும். பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    • குஜராத்தை சேர்ந்த ஹெமில் என்ற வாலிபர், ரஷிய ராணுவத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
    • ரஷியாவில் பணிபுரியும் மற்றொரு இந்தியரான இம்ரான் என்பவர் தெரிவித்தார்.

    ரஷியாவில் அதிக சம்பளத்துடன் வேலை இருப்பதாக அழைத்து செல்லப்பட்டு இந்திய வாலிபர்கள் சிலரை அந்நாட்டு ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. உதவியாளர்களாக பணியில் சேர்க்கப்பட்ட அவர்கள் உக்ரைனுக்கு எதிராக போரில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதையத்து இந்தியர்கள் சிலர் தங்களை மீட்கும்படி வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இதற்கிடையே சமீபத்தில் ரஷிய ராணுவத்தில் பணிபுரிந்த ஐதராபாத்தை சேர்ந்த முகமது அஸ்பான் (30) போரில் பலியானார்.


    இந்த நிலையில் ரஷிய ராணுவத்தில் பணிபுரிந்த மேலும் ஒரு இந்திய வாலிபர் உயிரிழந்துள்ளார். குஜராத்தை சேர்ந்த ஹெமில் என்ற வாலிபர், ரஷிய ராணுவத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். அவர் ரஷிய படைகள் கைப்பற்றிய கிழக்கு உக்ரைன் பிராந்தியமான டொனெட்ஸ்கில் உள்ள ராணுவ முகாமில் தங்கியிருந்தார்.

    இந்த நிலையில் போரில் ஏவுகணை தாக்குதலில் ஹெமில் பலியாகி விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை ரஷியாவில் பணிபுரியும் மற்றொரு இந்தியரான இம்ரான் என்பவர் தெரிவித்தார். போரில் இறந்த ஹெமில் உடலை மீட்டு கொண்டு வர வேண்டும் என்று அவரது தந்தை அஸ்வின் இந்திய தூதரகத்துக்கு பல முறை இ.மெயில் அனுப்பியதாக தெரிவித்தார்.

    • இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சண்டை நீடித்து வருகிறது.
    • உக்ரைனின் பதிலடி தாக்குதலில் ரஷியாவிற்கு அதிக அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ரஷியா- உக்ரைன் இடையிலான போர் இரண்டு வருடங்களை கடந்து இன்னும் நடைபெற்று கொண்டிருக்கிறது. ரஷியாவை எதிர்க்க உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிதியுதவி அளித்து வருவதுடன் ஆயுதங்களும் கொடுத்து உதவி வருகிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ், உக்ரைன் தலைநகர் கீவ் நகர் சென்றிருந்தார். அப்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது, ரஷியாவிற்கு எதிராக தொடர்ந்து சண்டையிட 10 ஆயிரம் டிரோன்கள் வழங்கப்படும் என கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே டிரோன்களுக்காக 200 மில்லியன் பவுண்டு ஒதுக்கப்படும் என இங்கிலாந்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது, 125 மில்லியன் பவுண்டு கூடுதலாக ஒதுக்க ஒப்புக் கொண்டுள்ளது.

    10 ஆயிரம் டிரோன்களில் கப்பல்களை குறிவைத்து தாக்கும் ஆயிரம் டிரோன்கள் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உக்ரைன படைகள் கருங்கடலில் ரஷியாவின் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு இங்கிலாந்தின் ஆயுதங்களை இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது பயன்படுத்தி வருகின்றன.

    கடந்த செவ்வாய்க்கிழமை உக்ரைன் டிரான் மூலம் ரஷியாவின் போர்க்கப்பலை தாக்கி அழித்தது. இதுவரை மூன்று கப்பல்களை அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    • உக்ரைனின் ஒடேசா நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் ரஷியா டிரோன் தாக்குதலை நடத்தியது.
    • இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

    கீவ்:

    உக்ரைனுக்கு எதிராக ரஷியா போர் தொடந்து 2 ஆண்டு கடந்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் நிதி உதவி அளித்து வருகின்றன.

    இந்நிலையில், உக்ரைனில் ஒடேசா நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் ரஷியா டிரோன் தாக்குதலை நடத்தியது. இதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

    இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியானார்கள். டிரோன் தாக்குதலில் 18 வீடுகள் சேதமடைந் தன.

    இதுதொடர்பாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் தாமதப்படுத்துவதாகவும், ஆயுதங்களை விரைவாக வழங்கி இருந்தால் ரஷிய டிரோன் தாக்குதலை தவிர்த்திருக்கலாம் என தெரிவித்தார்.

    • ரஷியாவுக்கு எதிரான போர்க்களத்தில் உக்ரைன் வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
    • உக்ரைனுக்கான ராணுவ உதவிக்கு அமெரிக்கா நிச்சயமாக ஒப்புதல் அளிக்கும் என ஜெலன்ஸ்கி கூறினார்.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி 2 ஆண்டு முடிந்து, மூன்றாம் ஆண்டாக தொடர்ந்து நடந்து வருகிறது. ரஷியாவுக்கு எதிரான போர்க்களத்தில் உக்ரைன் வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    உக்ரைனின் வெற்றி மேற்கத்திய நாடுகளின் ஆதரவைச் சார்ந்துள்ளது. உக்ரைனுக்கான ராணுவ உதவிக்கு அமெரிக்கா நிச்சயமாக ஒப்புதல் அளிக்கும்.

    ரஷியாவுடனான 2 ஆண்டு போரில் 31,000 உக்ரைன் வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர். ஆனால் ரஷிய அதிபர் புதினோ, ஒன்றரை முதல் 3 லட்சம் உக்ரைன் வீரர்கள் உயிரிழந்ததாக பொய் சொல்லி வருகிறார். எங்கள் வீரர்களின் இழப்புகள் ஒவ்வொன்றும் எங்களுக்கு ஒரு பெரிய இழப்பு என தெரிவித்தார்.

    ரஷிய அதிபர் புதினுடன் பேசுவீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, உங்களால் காது கேளாத நபருடன் பேசமுடியுமா? எதிரிகளைக் கொல்லும் ஒரு மனிதனுடன் பேசமுடியுமா? அவர் 2030-ம் ஆண்டு வரை அதிகாரத்தில் இருக்க நினைக்கிறார். நாங்கள் விரைவில் வீழ்த்த விரும்புகிறோம் என்றார்.

    • உக்ரைன் போர்-நவால்னி மரணம் விவகாரத்தில் ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.
    • நவால்னி உடலை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கக்கூடாது.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடந்து 3-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தது.

    இதற்கிடையே ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி சிறையில் மரணம் அடைந்ததற்கு ரஷிய அதிபர் புதின்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்தது. மேலும் நவால்னி மனைவியை அமெரிக்க அதிபர் ஜோபைடன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அப்போது நவால்னியின் மறைவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷியாவின் பொருளாதாரம், தொழில் துறையை பாதிக்கும் வகையில் பல புதிய தடைகள் விதிக்கப்படும் என்று ஜோபைடன் தெரிவித்தார்.

    இந்த நிலையில் உக்ரைன் போர்-நவால்னி மரணம் விவகாரத்தில் ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. ரஷியாவை சேர்ந்த நிறுவனங்கள் தனி நபர்கள் உள்பட 500 இலக்குகள் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.


    உக்ரைன் மீது போர் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிகளவில் ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும் போது, நாவல்னியின் சிறை வாசத்துடன் தொடர்புடைய நபர்கள், ரஷியாவின் நிதித் துறை, பாதுகாப்பு, தொழில் துறை, உள்ளிட்டவை மீது பொருளாதார தடை விதிக்கப்படுகிறது. ரஷியாவின் போருக்கு ஆதரவாக உள்ள 100 நிறுவனங்களுக்கு புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கிறோம் என்றார்.

    இதேபோல் சீனா உள்ளிட்ட சில நாடுகள் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கிடையே ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க ரஷிய அரசு நிபந்தனைகளை விதித்துள்ளது.

    நவால்னி உடலை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கக்கூடாது. உடல் அடக்கத்தினை ரகசியமாக நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

    • ரஷியாவின் திறன்களுக்கு மற்றொரு கடுமையான அடியாகும் என்று தெரிவித்தது.
    • ரஷியாவின் போர் கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி அதை மூழ்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ரஷியாவின் உளவு-விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக உக்ரைன் ராணுவ உளவுத்துறை கூறும்போது, அசோவ் கடலில் ரஷியாவின் ஏ-50 யூ உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

    இது ரஷியாவின் திறன்களுக்கு மற்றொரு கடுமையான அடியாகும் என்று தெரிவித்தது. ஆனால் இதுகுறித்து ரஷியா அதிகாரப்பூர்வமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    சமீபத்தில் ரஷியாவின் போர் கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி அதை மூழ்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரஷிய போர்க்கப்பல் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
    • இந்த தாக்குதலில் ரஷிய போர்க்கப்பல் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்தது.

    கீவ்:

    உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்தப் போரில் உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன.

    ரஷியாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது.

    இந்நிலையில், ரஷியாவின் போர்க் கப்பலை அழித்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், பிப்ரவரி 14 அன்று உக்ரைன் படையினர் கருங்கடலில் ரஷிய கடற்படையின் போர்க்கப்பலை அழித்தனர் என தெரிவித்துள்ளது.

    • உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரண்டு வருடங்கள் முடிவடைய இருக்கிறது.
    • ரஷியா மிகப்பெரிய அளவில் சேதங்களை சந்தித்த நிலையிலும், போரில் முழுமையாக வெற்றிபெற முடியவில்லை.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு முழு அளவில் படையெடுத்தது. உக்ரைனை பிடிக்கும் வரையில் போர் ஓயாது என ரஷிய அதிபர் புதின் அறிவித்தார்.

    என்றபோதிலும் ரஷியாவால் உக்ரைனை முழுமையாக ஆக்கிரமிக்க முடியவில்லை. பிடித்து வைத்திருந்த சில இடங்களை உக்ரைன் மீட்டது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் சண்டையிட்டு வருகிறது. இதனால் ரஷியா மிகப்பெரிய அளவில் இழப்பை சந்தித்து வருகிறது.

    இந்த நிலையில்தான் போர் நிறுத்தம் என்பதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிராகரித்துள்ளார். உக்ரைன் மீதான சண்டையின் நிறுத்தம், போர் நிறுத்தம் என்ற அர்த்தமாகிவிடாது. அது ரஷியா மீண்டும் ஆயுதங்களையும், வீரர்களையும் கட்டமைக்க உதவுவதாக இருக்கும். நாங்கள் வீழ்த்தப்படுவோம். அடக்குமுறை தோற்கடிக்கப்பட வேண்டும். அடக்குமுறையாளர் தோல்வியாளராக இருக்க வேண்டும்" என்றார்.

    • ரஷியா ஏவும் பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது.
    • மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.

    கீவ்:

    உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ள ரஷியா, சமீபகாலமாக தீவிரமாக வான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.

    இந்நிலையில், உக்ரைன் வெளியுறவு மந்திரி  டிமிட்ரோ குலேபா இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன் தொலைபேசியில் உரையாடினார்.

    இதுதொடர்பாக, உக்ரைன் வெளியுறவு மந்திரி  டிமிட்ரோ குலேபா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பிரச்சினைகள் குறித்து இந்திய வெளியுறவு மந்திரி டாக்டர் எஸ்.ஜெய்சங்கருடன் தொலைபேசியில் உரையாடினேன். இந்தியா-உக்ரைன் இடையிலான அரசு ஆணையத்தின் முதல் கூட்டத்தை எதிர்காலத்தில் நடத்த நாங்கள் ஒப்புக்கொண்டோம் என பதிவிட்டுள்ளார்.

    ×