இந்தியா
பிரதமர் மோடி

கொரோனா பரவல் அதிகரிப்பு - அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் இன்று ஆலோசனை

Update: 2022-01-12 23:35 GMT
இந்தியாவில் உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் தொற்றால் கொரோனா 2-வது அலை உருவானது. தற்போது ஒமைக்ரான் வைரசால் 3-வது அலை உருவாகியுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமாகப் பரவி வருகிறது. தொற்று பரவல் தினமும் அதிகரித்து வருகிறது. 
இதையடுத்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தி வருகின்றன.  

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன்  காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனையின்போது  தடுப்பூசி செலுத்தும் வேகம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Tags:    

Similar News