இந்தியா
பிரதமர் மோடி

போர்க்கால அடிப்படையில் சிறார்களுக்கான தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துக - பிரதமர் வேண்டுகோள்

Published On 2022-01-09 17:38 GMT   |   Update On 2022-01-09 17:38 GMT
மாவட்ட அளவில் சுகாதார உள்கட்டமைப்பினை மேம்படுத்த வேண்டும் என மத்திய மந்திரிகள், அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.
புதுடெல்லி:

ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலைத் தொடர்ந்து இந்தியாவில் கொரோனா வைரஸ் மறுபடியும் வேகமாகப் பரவத் தொடங்கி உள்ளது. இதனால் தினமும் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. 

இதையடுத்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் ஊரடங்குகளை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இதில் தடுப்பூசி பணிகள், மருத்துவ உட்கட்டமைப்புகளை தயார்படுத்துவது உள்ளிட்டவை குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

போர்க்கால அடிப்படையில் சிறார்களுக்கான தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநிலங்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் எனக்கூறிய அவர், விரைவில் மாநில முதல் மந்திரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளேன் என தெரிவித்தார்.

Tags:    

Similar News