பிரதமர் மோடியை என்ன வேண்டுமென்றாலும் என்னால் சொல்ல வைக்க முடியும்: ராகுல் காந்தி கிண்டல்
- நரேந்திர மோடி ஜி உங்களால் அதானி, அம்பானி பெயரை உச்சரிக்க முடியாது என நான் சொன்னேன்.
- இரண்டு நாள் கழித்து நரேந்திர மோடி அதானி, அம்பானி குறித்து சொன்னார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார்.
அப்போது பிரதமர் மோடியை என்ன வேண்டுமென்றாலும் என்னால் சொல்ல வைக்க முடியும் எனக் கூறினார். இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:-
நரேந்திர மோடி ஜி, உங்களால் அதானி, அம்பானி பெயரை உச்சரிக்க முடியாது என நான் சொன்னேன். இரண்டு நாள் கழித்து நரேந்திர மோடி அதானி, அம்பானி குறித்து சொன்னார்.
வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்படும் taka-tak taka-tak taka-tak... என நான் சொன்னேன். பின்னர் பிரதமர் மோடி அவரது பேச்சில் taka-tak பயன்படுத்தினார்.
மக்களாகிய நீங்கள் பிரதமர் மோடியிடம் கேட்க விரும்புவதை, அதை மோடியால் என்னால் சொல்ல வைக்க முடியும். அதேபோல் பிரதமர் மோடியிடம் ஏதாவது சொல்ல விரும்பவில்லை என்றாலும், நீங்கள் என்னிடம் தெரிவிக்கலாம்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
ராகுல் காந்தி அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கே வருகிற 20-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.