இந்தியா
மத்திய மந்திரி மனுசுக் மாண்டவியா

ஒரு வாரத்திற்குள் 2 கோடி சிறார்களுக்கு தடுப்பூசி - மத்திய சுகாதாரத்துறை மந்திரி பெருமிதம்

Update: 2022-01-08 06:09 GMT
தடுப்பூசி போடுவதில் இளம் இந்தியர்களிடையே அதிக உற்சாகம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை:

கொரோனா  மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் கடந்த 3ம் தேதி தொடங்கியது.  

பள்ளிகளில் 15 முதல் 18 வயது உடைய மாணவ, மாணவிகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்படுகிறது.  இந்நிலையில் ஒரு வாரத்திற்குள் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 2 கோடிக்கும் அதிகமான சிறார்கள் தடுப்பூசி முதல் டோஸ் பெற்றுள்ளதாக  மத்திய சுகாதார மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா பெருமிதம் தெரிவித்துள்ளார். 

தடுப்பூசி போடுவதில் இளம் இந்தியர்களிடையே அபரிமிதமான உற்சாகம் காணப்படுவதாகவும் தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News