இந்தியா
ஏர் இந்தியா

அது தவறான தகவல்... மறுப்பு தெரிவித்து உடனடியாக டுவீட் போட்ட ஏர் இந்தியா

Published On 2022-01-06 11:57 GMT   |   Update On 2022-01-06 15:00 GMT
அமிர்தசரஸ் விமான நிலைய இயக்குனர், தான் முன்பு அறிவித்த தகவலை திருத்தி, அது சர்வதேச சார்ட்டர்டு விமானம் என கூறினார்.
அமிர்தசரஸ்:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது. ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகள் விமான போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இந்தியாவிலும், விமான பயணிகளுக்கு தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் இத்தாலியில் இருந்து இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளில் 125 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக விமான நிலைய இயக்குனர் தெரிவித்தார். இந்த தகவலை ஏர் இந்தியா நிறுவனம் மறுத்துள்ளது. 

‘ரோமில் இருந்து அமிர்தசரஸ் வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாக ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தவறானது மற்றும் ஆதாரமற்றது. இத்தாலியில் இருந்து தற்போதைக்கு ஏர் இந்தியா விமானம் எதுவும் இயக்கப்படவில்லை’ என ஏர் இந்தியா தனது டுவிட்டரில் பதிவிட்டு விளக்கம் அளித்துள்ளது.

இதற்கிடையே, அமிர்தசரஸ் விமான நிலைய இயக்குனர், தான் முன்பு அறிவித்த தகவலை திருத்தி, அது சர்வதேச சார்ட்டர்டு விமானம் என கூறினார். எனினும், ஏர் இந்தியா விமானம் தொடர்பான செய்தி வேகமாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News