இந்தியா
அஸ்வத் நாராயண்

கொரோனா 3-வது அலை தொடங்கியதாக இப்போதே கூற முடியாது: அஸ்வத் நாராயண்

Published On 2022-01-03 02:59 GMT   |   Update On 2022-01-03 02:59 GMT
கர்நாடகத்தில் கொரோனா பரவல் நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதாக இப்போதே கூற முடியாது.
பெங்களூரு :

உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

15 வயதுக்கு மேற்பட்ட 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி நாளை (இன்று) தொடங்குகிறது. தடுப்பூசி பற்றாக்குறை இல்லை. போதுமான அளவுக்கு தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. சுகாதாரத்துறை உள்பட முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கர்நாடகத்தில் கொரோனா பரவல் நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதாக இப்போதே கூற முடியாது. நீர்ப்பாசன திட்டங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை. மேகதாது திட்ட விஷயத்தில் அரசு தனது நிலைப்பாட்டை சட்டசபையில் தெளிவுபடுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் அரசியல் நோக்கத்தில் பாதயாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

காங்கிரஸ் தனது ஆட்சியில் மேகதாது திட்டத்தை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஓட்டுக்காக இப்போது பாதயாத்திரை நடத்துகிறார்கள். இது சந்தர்ப்பவாத அரசியல். மக்களை திசை திருப்ப காங்கிரஸ் முயற்சி செய்கிறது. மேகதாது திட்டம் பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கு முக்கியம். இதை நாங்கள் நிச்சயம் அமல்படுத்துவோம்.

அரசு கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதால் தான் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் சம்பளத்தை உயர்த்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. அவர்களை பணி நிரந்தரம் செய்ய இயலாது. ஆனால் அவர்களுக்கு உதவி செய்ய அரசு தயாராக உள்ளது. இதற்காக ஒரு குழு அமைத்துள்ளோம். அந்த குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.
Tags:    

Similar News