இந்தியா
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்

டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான்: பாதிப்பு எண்ணிக்கை 20-ஆக உயர்வு

Published On 2021-12-17 07:02 GMT   |   Update On 2021-12-17 07:02 GMT
டெல்லியில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவிய ஒமைக்ரான் வைரஸ் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் கால் பதித்த ஒமைக்ரான் பல்வேறு மாநிலங்களிலும் வேகமாக பரவத் தொடங்கிவிட்டது.

குறிப்பாக, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கேரளா, ஆந்திரா, சண்டிகர், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் பரவிய நிலையில், தமிழகத்திலும் பாதிப்பு உறுதியாகி உள்ளது.

ஏற்கனவே டெல்லியில் ஒமைக்ரான் தொற்றால் 10 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், " டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது.

இதில் 10 பேர் சிகிச்சைப் பெற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளனர் " என்றார்.

இதையும் படியுங்கள்.. ஒமைக்ரானின் ஒரே பொதுவான அறிகுறி இதுதான்- நிபுணர்கள் கணிப்பு
Tags:    

Similar News