செய்திகள்
கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிகிறது

Published On 2021-11-25 04:37 GMT   |   Update On 2021-11-25 04:37 GMT
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 308 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 396 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,66,980 ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனா புதிய பாதிப்பை விட அதன் பிடியில் இருந்து மீள்பவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகமாக உள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,119 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதே நேரம் தொற்று பாதிப்பில் இருந்து நேற்று ஒரேநாளில் 10,264 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 44 ஆயிரத்து 882 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து 3 கோடியே 39 லட்சத்து 67 ஆயிரத்து 962 பேர் மீண்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, 1,09,940 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 539 நாட்களில் இல்லாத அளவில் குறைவு ஆகும்.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 308 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 396 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,66,980 ஆக அதிகரித்துள்ளது.



நாடு முழுவதும் நேற்று 90,27,638 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 119 கோடியே 38 லட்சத்தை கடந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நேற்று 11,50,538 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 63.59 கோடியாக உயர்ந்துள்ளது.

இதையும் படியுங்கள்...  13-15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு புகையிலை பழக்கம்- கணக்கெடுப்பில் தகவல்
Tags:    

Similar News