செய்திகள்
கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 28,326 பேருக்கு தொற்று

Published On 2021-09-26 04:50 GMT   |   Update On 2021-09-26 04:50 GMT
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 120, மகாராஷ்டிராவில் 58 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 260 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,46,918 ஆக உயர்ந்தது.
புதுடெல்லி:

இந்தியாவில் புதிதாக 28,326 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 36 லட்சத்து 52 ஆயிரத்து 745 ஆக உயர்ந்தது. கடந்த 22-ந் தேதி நிலவரப்படி பாதிப்பு 32 ஆயிரத்தை நெருங்கி இருந்தது. அதன்பிறகு 31,382, 29,616 ஆக குறைந்த நிலையில் நேற்று 28 ஆயிரமாக சரிந்துள்ளது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 16,671 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் 3,276, தமிழ்நாட்டில் 1,724, ஆந்திராவில் 1,167, மிசோரத்தில் 1,478 பேருக்கு தொற்று உறுதியானது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 120, மகாராஷ்டிராவில் 58 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 260 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,46,918 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,38,834 பேர் அடங்குவர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 26,032 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 29 லட்சத்து 2 ஆயிரத்து 351 ஆக உயர்ந்தது.

தற்போது 3,03,476 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்று முன்தினத்தை விட 2,034 அதிகம் ஆகும். சில நாட்களாக தினசரி பாதிப்பை விட குணம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக புது நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


நாடு முழுவதும் நேற்று 68,42,786 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 85.60 கோடியாக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News