செய்திகள்
ராகுல் காந்தி

ராகுல் காந்தி வெளியிட்ட வீடியோ- பேஸ்புக் அதிகாரிகளுக்கு குழந்தை உரிமைகள் அமைப்பு சம்மன்

Published On 2021-08-14 08:21 GMT   |   Update On 2021-08-14 10:08 GMT
விதிமுறைகளை மீறியதற்காக முடக்கப்பட்ட ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு ஒரு வாரத்திற்கு பிறகு இன்று செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார். சிறுமியின் உறவினர்களை பொதுவெளியில் அடையாளப்படுத்துவது போக்சோ சட்ட விதிகளுக்கு எதிரானது என்பதால், ராகுல் காந்தியின் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதுபற்றி நடவடிக்கை எடுக்கும்படி டுவிட்டர் நிறுவனத்திற்கு தேசிய குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியது. இதையடுத்து, விதிமுறைகளை மீறியதற்காக ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. ஒரு வாரத்திற்கு பிறகு அவரது டுவிட்டர் கணக்கு இன்று  செயல்பாட்டிற்கு வந்துள்ளது. 



இந்நிலையில், ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வீடியோவை பதிவு செய்ததற்காக நடவடிக்கை எடுக்கும்படி, பேஸ்புக் நிறுவனத்தற்கு தேசிய குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பேஸ்புக் தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை. எனவே, பேஸ்புக் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

அதில், ராகுல் காந்தியின் இன்ஸ்டாகிராம் பதிவு தொடர்பாக இதுவரை பதில் அளிக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை, இதுபற்றி விளக்கம் அளிக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News