செய்திகள்
ராகுல் காந்தி

பயப்படுகிறவர்கள் ஆர்.எஸ்.எஸ். பக்கம் போய்விடுங்கள்... அதிருப்தியாளர்களை அதிர வைத்த ராகுல்

Published On 2021-07-16 17:21 GMT   |   Update On 2021-07-16 17:21 GMT
காங்கிரசுக்கு வெளியே இருக்கும் பயப்படாத தலைவர்களை கட்சிக்குள் கொண்டு வரவேண்டும் என ராகுல் காந்தி பேசினார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி, கட்சியின் சமூக வலைத்தள நிர்வாகிகளிடையே காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது, காங்கிரசுக்கு பயமில்லாத தலைவர்கள் தேவை என்றும், பயம் உள்ளவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கடுமையாக பேசினார். இது அதிருப்தியாளர்களுக்கு அவர் விடுத்த எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

பயப்படாத பலர் இருக்கிறார்கள், அவர்கள் காங்கிரசுக்கு வெளியே இருக்கிறார்கள். நாம் அவர்களை காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் ராகுல் கேட்டுக்கொண்டார்.



‘பயப்படுகிறவர்களை வெளியேற்றுங்கள். தயவு செய்து நீங்கள் ஆர்எஸ்எஸ்-க்கு சென்றுவிடுங்கள். நீங்கள் எங்களுக்கு தேவையில்லை. நமக்கு அச்சமற்ற தலைவர்களே தேவை. அதுதான் நமது சித்தாந்தம். அதுதான் எனது அடிப்படை செய்தி’ என ராகுல் கூறினார்.

ராகுல் காந்தியின் இந்த தடாலடி பேச்சானது, பாஜகவுக்கு தாவிய ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் ஜிதின் பிரசாதா ஆகியோரை மறைமுகமாக தாக்கும் வகையில் இருந்தது.

Tags:    

Similar News