செய்திகள்
ஆதார் அட்டை

ஆதார் சேவைகளை பெற புதிய ஏற்பாடு

Published On 2021-07-13 15:03 GMT   |   Update On 2021-07-13 15:03 GMT
ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களை பதிவிட்டு, வரும் ஒடிபியை சேர்த்து, 1947 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால், ஆதார் எண் முடக்கப்படும்.

மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ், இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் இயங்குகிறது. இந்த ஆணையம் மத்திய அரசு வழங்கும் நிதி, மானியப் பயன்கள்,  ஆதார் எண் ஒதுக்கீடு உள்ளிட்ட சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது.

ஆதாரின் இணையதளம் மற்றும் அதன் செயலியைப் பயன்படுத்த, இணைய வசதி கட்டாயம் தேவைப்படும். ஆனால் இனிமேல்,  ஆதார் அட்டையில் நமக்கு தேவையான மாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும், செல்போனில் குறுஞ்செய்தி வாயிலாக செய்துகொள்ள, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.



அதன்படி, ஆதாரின் விர்ச்சுவல் அடையாள எண்ணை பெற, GVID  (SPACE) என டைப் செய்து, ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களை பதிவிட்டு, 1947 என்ற எண்ணுக்கு செல்போனில் குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும். ஆதாரின் விர்ச்சுவல் அடையாள எண்ணை திரும்ப பெற RVID (SPACE) என டைப் செய்து ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களை பதிவிட்டு, 1947 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

இதுபோல், ஆதார் ஓடிபி எண்ணை பெற GETOTP  (SPACE) என டைப் செய்து ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்ணை சேர்த்து 1947 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். ஒருவேளை ஆதார் அட்டை காணாமல் போனால், அந்த எண்ணை முற்றிலும் முடக்க, இரண்டு வழிமுறைகள் உள்ளன்.

1947 என்ற எண்ணுக்கு GETOTP  (SPACE) என டைப் செய்து,  ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்ணை சேர்த்து மெசேஜ் அனுப்ப வேண்டும். இரண்டாவது கட்டமாக LOCK UID (SPACE) என டைப் செய்துவிட்டு, ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களை பதிவிட்டு, வரும் ஒடிபியை சேர்த்து, 1947 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால், ஆதார் எண் முடக்கப்படும். இந்த புதிய வசதி இணையத் தொடர்பு இல்லாத மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
Tags:    

Similar News