செய்திகள்
கொரோனா பரிசோதனை

கேரளாவில் தொடர்ந்து உயரும் புதிய தொற்று... இன்று 15600 பேருக்கு கொரோனா

Published On 2021-07-07 15:07 GMT   |   Update On 2021-07-07 15:07 GMT
கேரளாவில் இன்று ஒரே நாளில் 148 பேர் கொரோனா பாதிப்பினால் இறந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 14108 ஆக உயர்ந்துள்ளது.
திருவனந்தபுரம்:

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை குறைந்துவருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 43 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் புதிய தொற்று வெகுவாக குறைந்துள்ள நிலையில், கேரளாவில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது.

நேற்று 14373 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 15600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு விகிதம் 10.36 சதவிதமாக உள்ளது. இன்று ஒரே நாளில் 148 பேர் இறந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 14108 ஆக உயர்ந்துள்ளது. இன்று 11629 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 107925 பேர் சிகிச்சையில் உள்ளனர்.



கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறையின் நிபுணர் குழு இன்று கள நிலவரத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டது. கொல்லத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகளை ஆய்வு செய்த குழுவினர், மாவட்ட கலெக்டரை சந்தித்து பேசினர். அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து மத்திய குழுவினரிடம் கலெக்டர் விளக்கினார்.

Tags:    

Similar News