செய்திகள்
டெல்லி ஐகோர்ட்டு

டுவிட்டர் நிறுவனத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2021-07-06 21:24 GMT   |   Update On 2021-07-06 21:24 GMT
குறைதீர் அதிகாரி நியமனம் தொடர்பாக டுவிட்டர் நிறுவனம் ஜூலை 8-ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதிகளின்படி சமூக ஊடக நிறுவனங்கள் குறைதீர் அதிகாரியை நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விதிகளை டுவிட்டர் நிறுவனம் பின்பற்றவில்லை என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி ரேகா பாலி விசாரித்து வருகிறார்.

நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மா ஆஜராகி, புதிய விதிகளை பின்பற்ற டுவிட்டர் நிறுவனத்துக்கு 3 மாத கால அவகாசம் அளித்தும் இதுவரை பின்பற்றவில்லை என வாதிட்டார்.

டுவிட்டர் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் சஜன் பூவையா, இதுதொடர்பாக சான்பிரான்சிஸ்கோவில் உள்ள டுவிட்டர் நிறுவனத்திடம் கலந்தாலோசித்து பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என கோரினார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனத்துக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்ற உத்தரவைப் பிறப்பிக்கப் போவதில்லை. எனவே, குறைதீர் அதிகாரி நியமனம் தொடர்பாக டுவிட்டர் நிறுவனம் ஜூலை 8-ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டிவரும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News