இந்தியா

நியாயமான விசாரணையை எதிர்பார்க்கிறேன்: ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் கெஜ்ரிவால் பதில்

Published On 2024-05-22 16:03 GMT   |   Update On 2024-05-22 16:03 GMT
  • கடந்த 13-ந்தேதி கெஜ்ரிவால் வீட்டில் வைத்து பிபவ் குமார் தாக்கியதாக ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டு.
  • பிபவ் குமாரை டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.

டெல்லி மாநில முதல்வராக கெஜ்ரிவால் இருந்து வருகிறார். இவர் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களை எம்.பி. ஸ்வாதி மாலிவால். இவர் கடந்த 13-ந்தேதி கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றபோது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தாக்கியதாக குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிபவ் குமாரை கைது செய்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் இதுவரை பதில் அளிக்காமல் இருந்தார். இந்த நிலையில் பிடிஐ நிறுவனத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டியளித்தார்.

அப்போது கெஜ்ரிவால் கூறியதாவது:-

இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. இதனால் நான் இது தொடர்பாக கருத்து தெரிவித்தால், அதன் நடைமுறையை பாதிக்கலாம். ஆனால், நியாயமான விசாரணை நடத்தப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இந்த விவகாரத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. போலீசார் இரண்டு பகுதிகளையும் நியாயமான வகையில் விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும்.

இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

பிபவ் குமாரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தற்போது அவர் போலீஸ் காவலில் உள்ளார்.

Tags:    

Similar News