செய்திகள்
கொரோனா பரிசோதனை

மகாராஷ்டிராவில் புதிதாக 9,195 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-07-02 01:54 GMT   |   Update On 2021-07-02 01:54 GMT
தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 661 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 21 பேர் தொற்றுக்கு பலியானார்கள். நகரில் இதுவரை 7 லட்சத்து 22 ஆயிரத்து 879 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரத்து 472 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மும்பை :

மகாராஷ்டிராவில் நேற்று புதிதாக 9 ஆயிரத்து 195 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 லட்சத்து 70 ஆயிரத்து 599 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 58 லட்சத்து 28 ஆயிரத்து 535 பேர் குணமாகி உள்ளனர். நேற்று மட்டும் 8 ஆயிரத்து 634 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது மாநிலத்தில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 667 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல நேற்று மாநிலத்தில் மேலும் 252 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் இதுவரை தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 197 ஆக அதிகரித்து உள்ளது.

தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 661 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 21 பேர் தொற்றுக்கு பலியானார்கள். நகரில் இதுவரை 7 லட்சத்து 22 ஆயிரத்து 879 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரத்து 472 பேர் உயிரிழந்து உள்ளனர்.

நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 733 நாட்களாக உள்ளது. தாராவியில் புதிதாக 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்து உள்ளது.
Tags:    

Similar News