செய்திகள்
ராகுல் காந்தி

பிரதமர் தனது தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டும் - ராகுல் காந்தி சொல்கிறார்

Published On 2021-06-17 21:25 GMT   |   Update On 2021-06-17 21:25 GMT
மத்திய அரசு கொரோனாவை தவறாக நிர்வகித்ததன் விளைவுதான் இது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி:


கொரோனாவின் எதிரொலியாக உலகம் முழுவதும் வறுமை அதிகரித்து இருக்கிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் வறுமை அதிகரித்து வருவதாகவும், உலகளாவிய வறுமைக்கோடு பட்டியலில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாகவும் உலக வங்கி கூறியிருக்கிறது.

உலகளாவிய வறுமைக்கோடு மற்றும் நடுத்தர வருமான வகுப்பினரின் பட்டியலில் இந்தியாவின் பங்களிப்பு முறையே 57.3 சதவீதம் மற்றும் 59.3 சதவீதமாக அதிகரித்து இருப்பதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.



இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். இந்த பட்டியலை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு, அதில் அவர், ‘மத்திய அரசு கொரோனாவை தவறாக நிர்வகித்ததன் விளைவுதான் இது. ஆனால் எதிர்காலம் குறித்து நாம் தற்போது சிந்தித்தாக வேண்டும். பிரதமர் தனது தவறுகளை ஒப்புக்கொண்டு, வல்லுனர்களின் உதவியை கோருவதில்தான், நமது நாட்டை மறுகட்டமைக்கும் பணி தொடங்கும். மறுத்து வாழ்வது எதற்கும் தீர்வாகாது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
Tags:    

Similar News