செய்திகள்
கோப்புப்படம்

மாநிலங்களிடம் 1.82 கோடி தடுப்பூசி கையிருப்பு - மத்திய அரசு தகவல்

Published On 2021-06-16 23:23 GMT   |   Update On 2021-06-16 23:23 GMT
கடந்த 24 மணி நேரத்தில் 28 லட்சத்து 458 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரையில் 26 கோடியே 19 லட்சத்து 72 ஆயிரத்து 14 டோஸ் தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன.
புதுடெல்லி:

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜனவரி 16 முதல் அமல்படுத்தி வருகிறது. இதன்கீழ் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரையில் 27 கோடியே 28 லட்சத்து 31 ஆயிரத்து 900 டோஸ் தடுப்பூசிகளை வழங்கி உள்ளது. இவற்றில் நேற்று காலை நிலவரப்படி, 25 கோடியே 45 லட்சத்து 45 ஆயிரத்து 692 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு விட்டன. இவற்றில் வீணாய்ப்போன தடுப்பூசிகளும் அடங்கும்.

மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் கையிருப்பாக 1 கோடியே 82 லட்சத்து 86 ஆயிரத்து 208 டோஸ் தடுப்பூசிகள் உள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 28 லட்சத்து 458 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரையில் 26 கோடியே 19 லட்சத்து 72 ஆயிரத்து 14 டோஸ் தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News