செய்திகள்
கொரோனா தடுப்பூசி

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி இறக்குமதிக்கு அனுமதி கேட்கும் ரிலையன்ஸ் நிறுவனம்

Published On 2021-06-05 00:14 GMT   |   Update On 2021-06-05 00:14 GMT
அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை தயாரித்துள்ளது.
புதுடெல்லி:

அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அமெரிக்கா அனுமதியும் அளித்துள்ளது.

இந்நிலையில், இந்த தடுப்பூசியை தனது ஊழியர்களுக்கு போடுவதற்காக இறக்குமதி செய்ய அனுமதி கேட்டு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சேவை அமைப்பான ரிலையன்ஸ் அறக்கட்டளை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

20 லட்சம் டோஸ்களை இறக்குமதி செய்து ஊழியர்களுக்கு பயன்படுத்துவதற்கு அனுமதி கேட்டுள்ள இந்த நிறுவனம், இதை வெளியே யாருக்கும் வர்த்தக ரீதியில் பயன்படுத்தமாட்டோம் என உறுதியும் அளித்திருக்கிறது.
Tags:    

Similar News