செய்திகள்
மந்திரி சுதாகர்

பெங்களூருவில் இதுவரை 28.30 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வினியோகம்: மந்திரி சுதாகர்

Published On 2021-06-04 03:06 GMT   |   Update On 2021-06-04 03:06 GMT
நாட்டில் பெரிய நகரங்களில் பெங்களூருவில் தான் அதிகளவில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதற்காக சுகாதாரத்துறை, பெங்களூரு மாநகராட்சி ஊழியர்களை பாராட்டுவதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

நாட்டில் பெரிய நகரங்களில் பெங்களூருவில் தான் அதிகளவில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நகரின் மொத்த மக்கள்தொகையில் இதுவரை 28.30 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இது நாட்டிலேயே முதல் இடம். இது மக்கள்தொகையில் 28.60 சதவீதம் ஆகும். இதற்காக சுகாதாரத்துறை, பெங்களூரு மாநகராட்சி ஊழியர்களை பாராட்டுகிறேன்.

இவ்வாறு மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News