search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Sudhakar"

    • ஊழலை ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறுகிறார்.
    • ஊழலை ஒழிப்பதாக கடந்த 2013-ம் ஆண்டு காங்கிரஸ் கூறியது.

    பெங்களூரு :

    சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    நாட்டை 60 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ், எல்லாவற்றிலும் ஊழல் செய்துள்ளது. ஊழல் காங்கிரசாரின் ரத்தத்தில் கலந்துள்ளது. தங்களை போலவே பா.ஜனதாவினரும் ஊழல் செய்வார்கள் என்று காங்கிரசார் கருதி எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். ஊழலை ஒழிப்பதாக கடந்த 2013-ம் ஆண்டு காங்கிரஸ் கூறியது.

    ஆனால் 5 ஆண்டுகள் ஆட்சி செய்த அக்கட்சியினர், ஊழல்களை செய்தனர். ஊழலுக்கு எதிரான லோக்அயுக்தா அமைப்பை முடக்கினர். ஊழல்களை பாதுகாக்க ஊழல் தடுப்பு படையை ஆரம்பித்தனர். நாங்கள் ஊழல்களை செய்திருந்தால், லோக்அயுக்தா அமைப்புக்கு அதிகாரம் வழங்கி இருக்க மாட்டோம். ஊழலை ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறுகிறார். அதன் அடிப்படையில் நாங்கள் ஊழலை ஒழிக்க பாடுபட்டு வருகிறோம். சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது (2013-18) ரூ.35 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    பெங்களூருவில் 900 ஏக்கர் நிலத்தை அரசின் அரசாணையில் இருந்து விடுவித்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் 50 சதவீத கமிஷன் வாங்கியுள்ளனர். ஆனால் எங்கள் அரசு மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை காங்கிரசார் கூறுகிறார்கள். ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு வழங்குவதாக கூறி இந்திரா உணவகங்களை தொடங்கினர். ஆனால் அதிலும் ஊழல் செய்துள்ளனர். குப்பை கழிவுகளை நிர்வகிப்பதில் ரூ.1,000 கோடி ஊழல் செய்துள்ளனர். இந்த ஊழல்கள் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பதிலளிக்க வேண்டும்.

    இவ்வாறு சுதாகர் கூறினார்.

    • எந்த ஒரு சமூகத்தையும் புண்படுத்தும் வகையில் யாரும் கருத்து கூறக்கூடாது.
    • மத்திய விசாரணை அமைப்புகள் சட்டப்படி செயல்படுகின்றன.

    பெங்களூரு:

    கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பா.ஜனதா மக்களால் வளர்ந்த கட்சி. மக்களின் நன்மைக்காக எங்கள் கட்சி பணியாற்றுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகள் எங்களால் எந்த திட்டத்தையும் அமல்படுத்த முடியவில்லை.

    பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக பதவி ஏற்று ஓராண்டு முடிவடைவதையொட்டி சாதனை விளக்க மாநாடு தொட்டபள்ளாபுராவில் 28-ந் தேதி (நாளை) நடத்துகிறோம். இந்த மாநாட்டில் மத்திய-மாநில அரசுகளின் திட்டங்களால் பயன் பெற்ற பயனாளிகள் கலந்து கொள்கிறார்கள்.

    ஒரு சமூகத்தின் ஆதரவால் மட்டும் ஒருவர் முதல்-மந்திரி ஆக முடியாது. ஒருவர் முதல்-மந்திரி ஆக அனைத்து சமூகங்களின் ஆதரவும் தேவைப்படுகிறது. எந்த ஒரு சமூகத்தையும் புண்படுத்தும் வகையில் யாரும் கருத்து கூறக்கூடாது.

    ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ. ஒக்கலிகர்கள் குறித்து பேசியுள்ளார். இது சரியல்ல. இது காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஒக்கலிகர்கள் விவசாய தொழிலை அதிகம் செய்கிறார்கள். மத்திய விசாரணை அமைப்புகள் சட்டப்படி செயல்படுகின்றன.

    நாட்டை 54 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ், அந்த அமைப்புகளை தவறாக பயன்படுத்தவில்லையா?. மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது அவரிடம் 10 மணி நேரம் வரை விசாரணை நடத்தினர். அமித்ஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது பா.ஜனதா போராட்டம் நடத்தவில்லை.

    இவ்வாறு சுதாகர் கூறினார்.

    • நமது அண்டை நாடான இலங்கை ஊரடங்கிற்கு பிறகு திவாலாகிவிட்டது.
    • குரங்கு அம்மை கர்நாடகத்தில் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

    பெங்களூரு:

    சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பொறுப்பேற்று வருகிற 28-ந்தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி தொட்டபள்ளாப்புராவில் பிரமாண்ட மாநாடு நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் 4 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த ஓராண்டில் பசவராஜ் பொம்மை சிறப்பான முறையில் ஆட்சி நிர்வாகத்தை நடத்தியுள்ளார்.

    இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினருக்கும் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவி பெரும் சவால் ஏற்பட்டது. அந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளோம். நமது அண்டை நாடான இலங்கை ஊரடங்கிற்கு பிறகு திவாலாகிவிட்டது.

    ஆனால் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது. கர்நாடகத்தில் குரங்கு அம்மை பரவவில்லை. விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வருகிறவர்களை கண்காணிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

    இந்த குரங்கு அம்மை கர்நாடகத்தில் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஜெயதேவா ஆஸ்பத்திரி இயக்குனராக டாக்டர் மஞ்சுநாத் பணியாற்றி வருகிறார். அவரது பணியை நீட்டிப்பு செய்வது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முடிவு செய்வார்.

    இவ்வாறு சுதாகர் கூறினார்.

    • ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் தடுப்பூசி மேளா நடத்தப்படும்.
    • கர்நாடகத்தில் 8 ஆயிரம் தடுப்பூசி மையங்கள் செயல்படுகின்றன.

    பெங்களூரு:

    சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. இந்த பணி இன்று(நேற்று) தொடங்கி வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை 75 நாட்கள் நடக்கிறது. 2-வது டோஸ் போட்டு 6 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள தகுதியானவர்கள். இந்த 75 நாட்களில் 4.34 கோடி பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும்.

    கர்நாடகத்தில் 8 ஆயிரம் தடுப்பூசி மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. மாநிலத்தில் தற்போது 8.84 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும் 31.55 லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. மாவட்ட அளவில் தடுப்பூசி செலுத்த நுண்ணிய திட்டத்தை வகுத்துள்ளோம். அலுவலகங்கள் மற்றும் வீடு, வீடாக சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

    மென்பொருள் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்துவோம். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் தடுப்பூசி மேளா நடத்தப்படும். தகுதியான அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் அரசுடன் பொதுமக்கள் கைகோர்க்க வேண்டும். அரசின் தடுப்பூசி மையங்களில் தகுதியானவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை இலவமாக போட்டு கொள்ளலாம்.

    இவ்வாறு சுதாகர் கூறினார்.

    • கர்நாடகத்தில் மக்களின் விருப்பங்களுக்கு ஏற்றபடி ஆட்சி நிர்வாகம் நடத்தப்படுகிறது.
    • தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் 10 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.

    பெங்களூரு:

    மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர் அமைச்சகம் சார்பில் நல்லாட்சி நிர்வாகத்திற்காக பொதுமக்கள், தொழில்முனைவோர் மற்றும் அரசை ஒன்றாக ஏற்படுத்துவது குறித்த மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திரசிங் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு பேசியதாவது:- ராஜதர்மம், ராம ராஜ்ஜியம் மற்றும் நலப்பணிகள் நாடு என்ற விஷயங்களில் மக்களுக்கு தெளிவு உள்ளது. சாணக்கிய கொள்கைகள், ராமாயணம், மகாபாரதத்தை இந்தியர்கள் படித்து வந்துள்ளனர். புத்த மதத்தில் கூட நல்லாட்சி என்றால் என்ன, அதை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. 12-வது நூற்றாண்டில் பசவண்ணர் சமுதாய மாற்றத்திற்காக அனுபவ மண்டபத்தை கட்டினார். அதன் மூலம் அவர் ஜனநாயகத்திற்கு அடித்தளம் அமைத்தார்.

    பசவண்ணர், செய்யும் தொழிலே தெய்வம் என்று கூறினார். நல்லாட்சி என்றால், சாமானிய மக்களின் தேவை என்ன, அவர்களின் பிரச்சினைகள் என்ன என்பதை புரிந்து அவற்றுக்கு தீர்வு காண்பது தான். கர்நாடகத்தில் மக்களின் விருப்பங்களுக்கு ஏற்றபடி ஆட்சி நிர்வாகம் நடத்தப்படுகிறது. தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் 10 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.

    கர்நாடகத்தில் கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசி 90 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில் இது மிக குறைவாக உள்ளது. நாட்டில் இதுவரை 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. பெங்களூருவில் மட்டும் 13 ஆயிரம் நிறுவனங்கள் செயலாற்றி வருகின்றன. அதனால் இங்கு வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆராய்ச்சி முதல் அனைத்து துறைகளிலும் மனித வளம் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு சுதாகர் கூறினார்.

    • ஒமைக்ரான் வைரசான பி.ஏ-2 பாதிப்பு அதிகம் இருக்கிறது.
    • புதிய வைரசின் மாறுபாடுகள் கர்நாடகத்தில் இருக்கிறது.

    பெங்களூரு:

    சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்த நபர்களிடம் பெறப்பட்ட மாதிரியை ஆய்வு நடத்தியதால் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    ஒமைக்ரான் வைரசான பி.ஏ-2 பாதிப்பு அதிகம் இருக்கிறது. கர்நாடகத்தை பொருத்த வரையில் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் வரை டெல்டா வைரஸ் பாதிப்பும், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பும் ஏற்பட்டு இருந்தது.

    கடந்த மாதம் (மே) முதல் இந்த மாதம் (ஜூன்) வரை ஒமைக்ரான் பி.ஏ.-2 வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த புதிய வைரசின் மாறுபாடுகள் கர்நாடகத்தில் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×