செய்திகள்
தேவேந்திர பட்னாவிஸ்

கொரோனாவால் ஆதரவற்ற 100 குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பட்னாவிஸ்

Published On 2021-05-29 03:40 GMT   |   Update On 2021-05-29 03:40 GMT
நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் கொரோனாவால் தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற அனைத்து குழந்தைகளையும் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக பட்னாவிஸ் தெரிவித்தார்.
நாக்பூர் :

நாக்பூரில் நேற்று முன்தினம் மத்திய போக்குவரத்துறை மந்திரி நிதின் கட்காரியின் பிறந்த நாள்விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் முன்னாள் மேயர் சந்தீப் ஜோஷியால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘சோபத் பாதுகாவலர் திட்டத்தை' தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசும்போது, கொரோனாவால் தாய், தந்தையை இழந்த 100 ஆதரவற்ற குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்று கொள்வதாக கூறினார். மேலும் அவர் தனது நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் கொரோனாவால் தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற அனைத்து குழந்தைகளையும் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

இதேபோல கொரோனா பரவலின் போது மந்திரி நிதின் கட்காரி மேற்கொண்ட பல பணிகளை பற்றியும் அவர் பாராட்டி பேசினார்.
Tags:    

Similar News