செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு குறைந்த அளவிலேயே ரத்த உறைவு பிரச்சினை - மத்திய அரசு தகவல்

Published On 2021-05-17 21:05 GMT   |   Update On 2021-05-17 21:05 GMT
கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே ரத்த உறைவு பிரச்சினை ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனா தடுப்பூசி போட்டபின் மோசமான பின்விளைவுகள் ஏதும் ஏற்படுகிறதா என்று ஆராய தேசிய அளவிலான குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

அந்த குழு மேற்கொண்ட ஆய்வின் முடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டில் கொரோனா தடுப்பூசி போடத் தொடங்கியதற்கு பின் 23 ஆயிரம் பேருக்கு மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் 700 மட்டுமே கவலைக்குரியவை என்று கூறப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.



498 தீவிரமான மற்றும் கடுமையான பாதிப்புகளை ஆராய்ந்ததில், வெறும் 26 பேருக்கு மட்டுமே ரத்தக்குழாயில் ரத்த உறைவு அபாய பிரச்சினை கண்டறியப்பட்டது. இது 10 லட்சம் டோஸ்களில் 0.61 சதவீதம்தான். அதிலும் குறிப்பாக, கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எவருக்கும் ரத்த உறைவு அபாயம் ஏற்பட்டதாக பதிவாகவில்லை.

இந்தியாவில் இந்த ரத்த உறைவு அபாய விகிதம், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் ஏற்பட்டதைவிட மிகவும் குறைவுதான் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News