செய்திகள்
மம்தா பானர்ஜி

ஆக்சிஜன் உற்பத்திக்கூட ஒதுக்கீட்டில் நியாயம் வேண்டும்: பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம்

Published On 2021-05-15 03:27 GMT   |   Update On 2021-05-15 03:27 GMT
‘மேற்கு வங்காள மாநில ஆஸ்பத்திரிகளுக்கு பி.எஸ்.ஏ. ஆக்சிஜன் உற்பத்திக்கூடங்களை வழங்குவதற்கு மத்திய அரசு யோசிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
கொல்கத்தா :

நாட்டில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் தீவிரமாகத் தொடரும் நிலையில், மருத்துவ ஆக்சிஜனுக்கு கடுமையான தேவை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான ஆக்சிஜனை அளிக்க அழுத்தச் சுழற்சி உறிஞ்சுதல் (பி.எஸ்.ஏ.) முறையில் மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி

செய்யும் கூடங்கள் நாடெங்கும் அமைக்கப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் 551 பி.எஸ்.ஏ. ஆக்சிஜன் உற்பத்திக்கூடங்களை அமைக்க பி.எம். கேர் நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்ய கடந்த மாதம் பிரதமர்

அலுவலகம் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

‘மேற்கு வங்காள மாநில ஆஸ்பத்திரிகளுக்கு பி.எஸ்.ஏ. ஆக்சிஜன் உற்பத்திக்கூடங்களை வழங்குவதற்கு மத்திய அரசு யோசிப்பது

வெளிப்படையாகத் தெரிகிறது. இது தொடர்பான முன்னுரிமை மாற்றி மாற்றி அமைக்கப்படுகிறது. மேற்கு வங்காளத்துக்கான ஒதுக்கீடு நாளுக்கு

நாள் குறைக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் எங்களுக்கு 70 பி.எஸ்.ஏ. உற்பத்திக்கூடங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டநிலையில், தற்போது முதல்கட்டமாக 4 மட்டும்

வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மீதமுள்ளவை எப்போது அளிக்கப்படும் என்றும் தெரியவில்லை.

இது தொடர்பான முன்னுரிமைகள், செயல்படுத்தும் முகமைகள், ஒதுக்கீட்டு அளவில் நேர்மை, நியாயம், வேகம் வேண்டும் என்று தங்களை நான்

கேட்டுக்கொள்கிறேன். இதில் மத்திய அரசின் முடிவற்ற தன்மையால் மாநிலத்தில் நாங்கள் சொந்தமாக துணைநிலை பி.எஸ்.ஏ.

உற்பத்திக்கூடங்களை நிறுவும் திட்டம் பாதிக்கப்படுகிறது.’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News