செய்திகள்
தமிழக முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை:
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இன்று பதவியேற்றார். அவர் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களும் பதவியேற்றனர்.
பதவி ஏற்றதும் கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு கோட்டைக்கு சென்றார். அங்கு முதல்-அமைச்சர் இருக்கையில் அமர்ந்து தனது பணிகளை தொடங்கினார். முதல் பணியாக, கொரோனா நிவாரணம், ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.
இந்நிலையில் தமிழக முதல் அமைச்சராக பதவியேற்று கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அனுஜார்ஜ் ஆகிய 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழக முதல் அமைச்சராக பதவியேற்று கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Congratulations to Thiru @mkstalin on being sworn-in as Tamil Nadu Chief Minister.
— Narendra Modi (@narendramodi) May 7, 2021