செய்திகள்
கோப்புபடம்

கொரோனா பரவல் அதிகரிப்பு - மேற்கு வங்கத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Published On 2021-04-30 15:02 GMT   |   Update On 2021-04-30 15:02 GMT
மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 17 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கொல்கத்தா:

கொரோனா தொற்று அதிகரிப்பால் மேற்கு வங்காளத்தில் பகுதியளவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ”ஷாப்பிங் காம்பளக்ஸ், அழகு நிலையங்கள்,  திரையரங்குகள், விளையாட்டு கூடங்கள், ஸ்பா ஆகியவை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கு. மார்க்கெட்டுகள் தினமும்  காலை 7-10 மணி, மாலை 3-5 மணி வரை என 5 மணி நேரம் மட்டுமே செயல்பட அனுமதி உண்டு.



உணவு விடுதிகள், பார்கள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவை திறக்க அனுமதி இல்லை. ஆன்லைன் மூலமான சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படும்” போன்ற கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 17 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

Tags:    

Similar News