செய்திகள்
டெல்லி வந்தடைந்த மருந்து பொருள்கள்

கொரோனா சிகிச்சை பணிகளுக்காக ரஷியா அனுப்பிய 20 டன் மருந்து பொருட்கள் டெல்லி வந்தன

Published On 2021-04-29 22:37 GMT   |   Update On 2021-04-29 22:37 GMT
இந்தியாவின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரஷியாவில் இருந்து 20 டன் மருந்து பொருட்கள் மற்றும் தளவாடங்கள் நேற்று டெல்லி வந்து சேர்ந்தன.
புதுடெல்லி:

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு வெளிநாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இந்த வரிசையில் ரஷியாவில் இருந்து நேற்று 2 விமானங்களில் 20 டன் மருத்துவ பொருட்கள் டெல்லி வந்து சேர்ந்தன. இதில் ஆக்சிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் அடங்கியுள்ளன.

இந்த தகவலை இந்தியாவுக்கான ரஷிய தூதர் நிகோலே குதாசேவ் தெரிவித்தார். கொரோனாவால் இந்தியா எதிர்கொண்டு வரும் தற்போதைய சூழலை ரஷியா உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறிய குதாசேவ், இரு நாடுகளும் இணைந்து எதிர்க்க வேண்டிய களங்களில் இதுவும் ஒன்று என தெரிவித்தார்.



முன்னதாக, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விவரித்து இருந்தார்.

அதைத்தொடர்ந்து ரஷியா இந்த மருத்துவ உதவியை அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டின் இந்த மனிதாபிமான உதவிக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News