செய்திகள்
கோப்புப்படம்

மராட்டியத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்த 8 பேரின் உடல்கள் ஒன்றாக போட்டு தகனம்

Published On 2021-04-08 00:23 GMT   |   Update On 2021-04-08 00:23 GMT
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி பலி எண்ணிக்கையும் 300-ஐ நெருங்கி உள்ளது.
அவுரங்காபாத்:

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி பலி எண்ணிக்கையும் 300-ஐ நெருங்கி உள்ளது.

இந்தநிலையில் பல சுடுகாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தகனம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக கொரோனா பரவும் என்ற பீதியால் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
    
இதேபோல பீட் மாவட்டம், அம்பாஜோகாய் நகர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறுதி சடங்குகளை மேற்கொள்ள அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து உள்ளூர் அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தகனம் செய்ய தற்காலிகமாக அங்கிருந்து 2 கி.மீட்டர் தூரத்தில் உள்ள மண்ட்வா சாலையில் மற்றொரு இடத்தை அடையாளம் கண்டனர்.

இருப்பினும் இந்த பகுதியில் இடவசதி குறைவாக உள்ளது. ஆனால் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு ஒரே நேரத்தில் பலரின் உடல்களை தகனம் செய்யும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.

இதன்படி நேற்று 8 பேரின் உடல்களை ஒரே தகன மேடையில் போட்டு சிதைக்கு தீ மூட்டினர்.
Tags:    

Similar News