செய்திகள்
கோப்புபடம்

கேரளாவில் 91 மாணவர்களுக்கு கொரோனா - டியூ‌ஷன் சென்டருக்கு சீல்

Published On 2021-02-11 08:50 GMT   |   Update On 2021-02-11 08:50 GMT
கேரளாவில் தனியார் டியூ‌ஷன் சென்டரில் பயிற்சிக்கு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 91 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

திருவனந்தபுரம்:

நாடுமுழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. எனினும், கேரள மாநிலத்தில் அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பின்னும் கொரோனா தாக்கம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் பொன்னானி மரஞ்செரியின் பகுதியில் உள்ள தனியார் டியூ‌ஷன் சென்டரில் பயிற்சிக்கு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 91 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மாணவர்கள் அருகில் உள்ள 2 அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். மேலும் கூடுதல் பயிற்சிக்காக அருகில் டியூ‌ஷன் சென்டரில் பயிற்சி எடுத்து வருகின்றனர். தற்போது அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை பரிசோதனை முலம் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்த டியூ‌ஷன் சென்டரில் இருந்து மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருக்கும் என அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

இதையடுத்து தனியார் டியூ‌ஷன் சென்டருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அதில் வெளியாகும் முடிவுகள் அடிப்படையில் பிற பள்ளி மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படும்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பொன்னானி நகர சபை அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் கோபால கிருஷ்ணன் ஆலோசனை நடத்தி இப்பகுதியில் உள்ள மேலும் 6 பள்ளிகளில் கொரோனா தொற்று பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கொரோனா தடுப்பு வழிகாட்டு முறைகளை கண்டிப்புடன் அமல்படுத்தவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, தனியார் டியூ‌ஷன் சென்டரில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அது மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

Similar News