செய்திகள்
வைரல் புகைப்படம்

விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ

Published On 2021-02-09 04:48 GMT   |   Update On 2021-02-09 17:22 GMT
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் வீடியோ பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


வாகனம் ஒன்றினுள் இருந்தபடி நபர் ஒருவர் மதுபானம் வினியோகம் செய்வதும், அதனை வாகனத்தின் வெளியில் இருக்கும் சிலர் வாங்கி செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தற்போதைய விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக வைரல் வீடியோவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

விவசாயிகள் போராட்டம். இலவச மதுபான வினியோகம் எனும் தலைப்பில் 31 நொடிகள் ஓடும் வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் இந்த வீடியோ விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டதா என ஆய்வு செய்ததில், அது கடந்த ஆண்டு எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

உண்மையில் இந்த வீடியோ கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இணையத்தில் வலம்வருகிறது. மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவித்தது. இதுகுறித்த இணைய தேடல்களில் இந்த வீடியோ 2020 ஏப்ரல் மாதம் முதல் பேஸ்புக்கில் வலம்வருவது கண்டறியப்பட்டு உள்ளது.



பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையில் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்கள் சார்பில் நவம்பர் மாத வாக்கில் போராட்டங்கள் துவங்கின. 

அந்த வகையில் வைரல் வீடியோ தற்போதைய விவசாயிகள் போராட்டம் துவங்குவதற்கு முன்பே சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருப்பது உறுதியாவிகிவிட்டது. அந்த வகையில், வைரல் வீடியோவுக்கும் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News