செய்திகள்
தேஜஸ்வி யாதவ், மம்தா பானர்ஜி

ஏறக்குறைய அனைத்து துறைகளையும் விற்பதற்கான பட்ஜெட்: தேஜஸ்வி யாதவ், மம்தா கடும் விமர்சனம்

Published On 2021-02-01 11:40 GMT   |   Update On 2021-02-01 11:40 GMT
2021-2022-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள நிலையில், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளனர்.
2021-2022-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர்கள் பட்ஜெட்டை பாராட்டியுள்ளனர்.

ஆனால் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் பட்ஜெட் குறித்து கூறுகையில் ‘‘இந்த பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கானது அல்ல. இது விற்பனைக்கானது. முன்னதாக அவர்கள் ரெயில்வேதுறை, ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் மற்றும் பல துறைகளை விற்பனை செய்தனர். 

இந்த பட்ஜெட்டில் எரிவாயு குழாய், அரங்கம், சாலைவழிகள் மற்றும் கிடங்குகள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் விற்பனை செய்யக்கூடியது பற்றியது’’ என்றார்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ‘‘இது மக்கள் விரோத பட்ஜெட். அவர்கள் எப்போதும் பொய்யான அறிக்கைகளை கொடுப்பார்கள். இந்தியாவின் முதல் பேப்பர் அல்லாத பட்ஜெட், ஏறக்குறைய அனைத்து துறைகளிலும் விற்பனை செய்துவிட்டது. அமைப்புசாரா துறைக்கு ஏதுமில்லை’’ என்றார்.
Tags:    

Similar News