செய்திகள்
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்- குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 97 சதவீதத்தை நெருங்கியது

Published On 2021-01-31 04:34 GMT   |   Update On 2021-01-31 04:39 GMT
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,052 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,07,46,183 உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 13,052 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 127 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,54,274 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,04,23,125 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 13,965 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 96.99 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, தற்போது 2 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,68,784 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நாடு முழுவதும் 37,44,334 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,44,307 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News