செய்திகள்
கோப்புப்படம்

நீதி வழங்கலில் தமிழகம் 2-வது இடம் - கருத்துக்கணிப்பில் தகவல்

Published On 2021-01-29 02:22 GMT   |   Update On 2021-01-29 02:22 GMT
பொதுமக்களுக்கு நீதி வழங்குவதில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் 2-வது இடம் தமிழகத்துக்கு கிடைத்தது.
புதுடெல்லி:

டாடா அறக்கட்டளை சார்பில் ‘இந்தியா நீதி அறிக்கை-2020’ என்ற தலைப்பில், பொதுமக்களுக்கு நீதி வழங்குவதில் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் பற்றி 2-வது ஆண்டாக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. நீதித்துறை, சிறைத்துறை, சட்ட உதவிகள் மற்றும் போலீஸ் துறை ஆகிய 4 பிரிவுகளில் தனித்தனியாக கருத்துகள் கணக்கிடப்பட்டன. இது அறிக்கையாக தயாரிக்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஒட்டுமொத்தமாக சிறந்த முதல் மாநிலமாக மராட்டிய மாநிலம் அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டும் மராட்டியமே முதலிடம் பிடித்தது.

2-வது இடம் தமிழகத்துக்கு கிடைத்தது. கடந்த ஆண்டு தமிழகம் 3-வது இடத்தில் இருந்தது. சிறிய மாநிலங்கள் பிரிவில் திரிபுரா, சிக்கிம் ஆகியவை முதல் 2 இடங்களில் உள்ளன.

நீதித்துறையை மட்டும் கணக்கில் கொண்டால் நாட்டிலேயே முதல் மாநிலம் தமிழகம் ஆகும்.
Tags:    

Similar News