செய்திகள்
கோப்புப்படம்

குஜராத் ஏரியில் படகு கவிழ்ந்ததில் 5 பேர் பலி

Published On 2021-01-18 19:17 GMT   |   Update On 2021-01-18 19:17 GMT
குஜராத் ஏரியில் எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள்.
குஜராத்:

குஜராத் மாநிலம், நவ்சாரி மாவட்டத்தில் உள்ள ஏரி பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். நேற்று முன்தினம் மாலை சுற்றுலாப்பயணிகள் படகில் இருந்து இறங்கும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகளுக்கு இடையே அடிதடி மோதல் ஏற்பட்டது. இதில் 15 பேர் காயம் அடைந்தனர். இதனால் படகில் இருந்த சுற்றுலா பயணிகள் அவசரமாக வெளியே வர முயற்சித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியது. இதில் குழந்தைகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கினர்.

இதுபற்றி சிக்லி தாலுகா போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கினர். இரவு வரை தொடர்ந்த மீட்பு பணிக்கு பின் நீரில் மூழ்கிய 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களில் 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News