செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு மத்தியில் கொரோனா பரவல்? - சுப்ரீம் கோர்ட்டு கவலை

Published On 2021-01-07 21:08 GMT   |   Update On 2021-01-07 21:08 GMT
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு மத்தியில் கொரோனா பரவல் உள்ளதா? என சுப்ரீம் கோர்ட்டு கவலை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் தப்லீக் ஜமாத் மாநாட்டை கடந்த ஆண்டு நடத்த அனுமதித்ததற்கு எதிராக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை சுப்ரீம கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று நடைபெற்றது.

அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, சொலிசிட்டர் துஷார் மேத்தாவிடம், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்ட களத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா? என கேட்டதுடன், விவசாயிகள் மத்தியில் கொரோனா பரவல் உள்ளதா? என தெரியவில்லை.

கொரோனா பரவல் பிரச்சினை விவசாயிகள் நடத்திவரும் போராட்ட களத்தில் எழும். கொரோனா பரவாமல் இருக்க வேண்டிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இதற்கு சொலிசிட்டர் துஷார் மேத்தா, இது தொடர்பாக விசாரித்து கோர்ட்டுக்கு தெரிவிக்கப்படும் என உறுதியளித்தார்.
Tags:    

Similar News