செய்திகள்
உச்ச நீதிமன்றம்

வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க சாத்தியம் உள்ளதா? -உச்ச நீதிமன்றம் கேள்வி

Published On 2020-12-17 08:57 GMT   |   Update On 2020-12-17 08:57 GMT
வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
புதுடெல்லி:

டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது என்றும், அதேசமயம் போராட்டம் எந்தஒரு தனிநபருடைய வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையக் கூடாது என்றும் கருத்து தெரிவித்தார்.

அதேசமயம், சட்டங்களை நிறுத்தி வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. வழக்கு விசாரணை முடியும் வரை, சட்டத்தை அமல்படுத்துவதற்காக எந்தவொரு நிர்வாக நடவடிக்கையும் எடுக்காது என்று அரசாங்கம் உறுதியளிக்க முடியுமா? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ஆனால் சட்டங்களை நிறுத்தி வைத்தால் விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வரமாட்டார்கள் என அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார்.
Tags:    

Similar News