செய்திகள்
பிரகாஷ் ஜவடேகர்

சர்க்கரை ஏற்றுமதிக்கு ரூ.3500 கோடி மானியம் -மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Published On 2020-12-16 10:28 GMT   |   Update On 2020-12-16 11:38 GMT
சர்க்கரை ஏற்றுமதிக்கு 3500 கோடி ரூபாய் மானியம் வழங்குவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி:

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

சர்க்கரை ஏற்றுமதிக்கு 3500 கோடி ரூபாய் மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மந்திரிசபை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை மானியத்தின் மூலம் 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படும்.

கரும்பு உற்பத்தி செய்யும் 5 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள், 5 லட்சம் ஊழியர்களும் பயனடைவார்கள். 

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.3.92 லட்சம் கோடி மதிப்புள்ள தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலத்தின் அடுத்த சுற்றுக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்திருப்பதாக மத்திய மந்திரி  ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். நம்பிக்கையான நிறுவனங்களிடம் இருந்து கருவிகளை தொலைத்தொடர்புத்துறை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Tags:    

Similar News