செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா அதிகரிப்புக்கு காற்றுமாசு முக்கிய காரணம் - பிரதமரிடம் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

Published On 2020-11-25 01:09 GMT   |   Update On 2020-11-25 01:09 GMT
டெல்லியில் கொரோனா 3-வது அலை தீவிரமாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், காற்று மாசு முக்கிய காரணம் ஆகும் என அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமரிடம் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா பரவல் அதிகரித்துள்ள மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் பங்கேற்ற டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமரிடம் கூறியதாவது:-

டெல்லியில் கொரோனா 3-வது அலை தீவிரமாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், காற்று மாசு முக்கிய காரணம் ஆகும். அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பதில் இருந்து உருவாகும் காற்று மாசை கட்டுப்படுத்த பிரதமர் தலையிடவேண்டும்.

மத்திய அரசு ஆஸ்பத்திரிகளில், தீவிர சிகிச்சை பிரிவில் கூடுதலாக ஆயிரம் படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News