செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

பட்டப்பகலில் கடத்தப்படும் பெண் - உத்திர பிரதேசத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ

Published On 2020-10-06 06:12 GMT   |   Update On 2020-10-06 06:12 GMT
பட்டப்பகலில் பெண் ஒருவர் கடத்தப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ உத்திர பிரதேசத மாநிலத்தில் எடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், பெண் ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்படும் வீடியோ உத்திர பிரதேச மாநிலத்தில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது கர்நாடக மாநிலத்தின் கோலார் பகுதியில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. வைரல் வீடியோவில் உள்ள பெண் திருமணத்திற்கு மறுத்ததால், கடத்தப்பட்டார் என கூறப்படுகிறது. பகீர் காட்சிகள் அடங்கிய வீடியோ பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் வைரலாகி வருகிறது. 



இந்த வீடியோ பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாக கூறி பகிரப்பட்டு வருகிறது. வைரல் வீடியோ இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொது இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

அந்த வகையில் பெண் கடத்தப்படும் வீடியோ உத்திர பிரதேச மாநிலத்தில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News