செய்திகள்
காங்கிரஸ்

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நாளை காங்கிரஸ் போராட்டம்

Published On 2020-10-04 13:07 GMT   |   Update On 2020-10-04 13:07 GMT
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நாளை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், உயர்சாதி வாலிபர்கள் 4 பேரால் கூட்டு பலாத்காரம் செய்து, சித்ரவதைக்கும் ஆளான நிலையில் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக பல இடங்களிலும் கண்டன போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் ஹத்ராசில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பிக்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

ஹாத்ராஸ் சம்பவத்திற்கு நீதி கேட்டு மாநிலங்கள் மற்றும் மாவட்ட தலைமையகங்களில் நாளை சத்தியாக்கிரக போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News